இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்: டேங்கர் லாரி வாங்க தலித் தொழில் முனைவோருக்கு கடனுதவி

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின தொழில்முனைவோருக்கு டேங்கர் லாரி வாங்குவதற்கு கடனுதவி வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. 

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின தொழில்முனைவோருக்கு டேங்கர் லாரி வாங்குவதற்கு கடனுதவி வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. 
ஐஓசி, பிபிசில் உள்ளிட்ட நிறுவனங்கள் சமையல் எரிவாயுவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகளுக்காக ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியுள்ளன. இதில் 22.5 சதவீதம் தலித் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்த டெண்டரில் பங்கேற்போர் டேங்கர் லாரி வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது டேங்கர் லாரி வாங்குவதற்கான கடனுதவி ஆவணங்கள் இருந்தாலே போதும் என அறிவிக்கப்பட்டது. 
இந்தநிலையில் இந்தியன் வங்கி- இந்திய தலித் தொழில் மற்று வர்த்தக சபை (டிஐசிசிஐ) இடையே மேற்கொள்ளப்பட்ட 'இந்தன் வாகனா' புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி டேங்கர் லாரிகள் வாங்க விரும்பும் தலித் தொழில்முனைவோருக்கு இந்தியன் வங்கியின் சார்பில் அதிகபட்சம் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். 'ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழில்முனைவோர்களும் விண்ணப்பிக்கலாம். டேங்கர் லாரி வாங்குவதற்கான கடனுதவி பெற எந்த விதமான சொத்து உத்தரவாத பத்திரமும் தேவையில்லை. இந்தக் கடனை 66 மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தலாம்.
இந்தியா முழுவதும் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் இந்தத் திட்டம் அமலில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் (எம்எஸ்எம்இ) சந்திராரெட்டி, இந்திய தலித் தொழில் மற்று வர்த்தக சபை சென்னை பிரிவின் செயலர் தினேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர். கடன் பெற தகுதியான தலித் தொழில்முனைவோரை கண்டறியும் பணியை இந்திய தலித் தொழில் மற்று வர்த்தக சபை (டிஐசிசிஐ) மேற்கொள்ளும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com