மிஸ்டு கால், எஸ்எம்எஸ் மூலம் வருங்கால வைப்பு நிதி குறித்த தகவல்களை பெறலாம்

வருங்கால வைப்புநிதி (பிஎஃப்) கணக்கை வைத்துள்ளவர்கள், குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அல்லது மிஸ்டு கால் மூலம் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகை, கடைசிப் பங்களிப்பு போன்ற விவரங்களை

வருங்கால வைப்புநிதி (பிஎஃப்) கணக்கை வைத்துள்ளவர்கள், குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அல்லது மிஸ்டு கால் மூலம் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகை, கடைசிப் பங்களிப்பு போன்ற விவரங்களை எளிதில் பெறலாம்.
இதுகுறித்து அம்பத்தூர் இபிஎஃப் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிஎஃப் கணக்கு வைத்துள்ள உறுப்பினர், 77382-99899 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு EPFOHO UAN-ஐ டைப் செய்து அனுப்புவதன் மூலம் வருங்கால வைப்பு நிதி விவரங்களை குறுஞ்செய்தி மூலம் பெறமுடியும். இந்த விவரங்களை பிராந்திய மொழிகளிலும் கிடைப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் பெங்காலி மொழிகளில் பெற முடியும்.
மேலும், EPFOHO UAN ஐ டைப் செய்து 77382-99899 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் வருங்கால வைப்பு நிதி இருப்பு, கடைசிப் பங்களிப்பு உள்ளிட்ட விவரங்களையும் தமிழில் பெற முடியும். இச்சேவையை ஸ்மார்ட் ஃபோன் மட்டுமின்றி சாதாரண மொபைல்போனிலும் பெறமுடியும்.
இணையதளத்தில் EPFOHO UAN எண், மொபைல் எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் 011- 22901406 என்ற தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமும் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை பெறலாம். இம்முறைகள் தவிர, UMANG APP என்ற செயலி மூலமும் இத்தகவல்களை பெற முடியும் எனச் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com