கன்டெய்னர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக நிலையங்களைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை (மார்ச் 19) முதல் தொடங்க உள்ளதாக கன்டெய்னர் லாரி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக நிலையங்களைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை (மார்ச் 19) முதல் தொடங்க உள்ளதாக கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் டி.பெருமாள், எஸ்.ஆர்.ராஜா, எம்.எம்.கோபி ஆகியோர் நிருபர்களிடம் கூறியது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தனியார் சரக்குப் பெட்டக நிலையங்கள் உள்ளன. ஏற்றுமதி இறக்குமதிக்கான சரக்குகளைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ள இந்நிலையங்களின் கூட்டமைப்போடு, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை சரக்குப் பெட்டக நிலையங்கள் மீறி வருகின்றன. இதுகுறித்து பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் இது குறித்து இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் ஏற்கனவே அறிவித்தபடி திங்கள்கிழமை (மார்ச் 19) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com