ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச மாதிரி வகுப்பு நாளை தொடக்கம்

சென்னை அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் சார்பில் சனி (மே 12) , ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 13) ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச மாதிரி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

சென்னை அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் சார்பில் சனி (மே 12) , ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 13) ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச மாதிரி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து கல்வி மைய இயக்குநர் மு.சண்முகம் வெளியிட்ட செய்தி:
சென்னை அண்ணா நகரில் கடந்த 2012 முதல் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் தலைசிறந்த ஆசிரியர்கள் குழுவைக் கொண்டு அளிக்கப்படும் பயிற்சி மூலம் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
இலவச மாதிரி வகுப்புகள் தொடக்கம்: 2018-19-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்கான புதிய வகுப்புகள் மே 18, ஜூன் 3 ஆகிய தேதிகளில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக, சனிக்கிழமை ( மே 12) , ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 13) ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச மாதிரி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், ஐஏஎஸ் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் உயர்மதிப்பெண் பெறும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் 10 பேர் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளனர். 
இந்த இலவச மாதிரி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவசப் பாடத் திட்டம், கட்டணச் சலுகை தேர்வு நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மே 20, ஜூன் 3-ஆம் தேதிகளில் தொடங்க உள்ளது.
தொடர்புக்கு: 044-26265326 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 96001 24042, 98400 97666 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com