செரிமானப் பாதை புற்றுநோயை எலுமிச்சம் பழம் தடுக்கும்

செரிமானப் பாதையில் புற்றுநோய் வராமல் தடுக்க எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பொது அறுவைச் சிகிச்சைத் துறைப் பேராசிரியர்
செரிமானப் பாதை புற்றுநோயை எலுமிச்சம் பழம் தடுக்கும்

செரிமானப் பாதையில் புற்றுநோய் வராமல் தடுக்க எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பொது அறுவைச் சிகிச்சைத் துறைப் பேராசிரியர் அஃபீ அஸ்மா கூறினார்.

இதுதொடர்பான பொதுமக்கள், மருத்துவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொது அறுவைச் சிகிச்சைத் துறையின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50-க்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கேள்விகளுக்கும் மருத்துவர்கள் விடையளித்தனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் அஃபீ அஸ்மா பேசியது:
நமது உடலில் செரிமானப் பாதை என்பது உணவு குழாயிலிருந்து மலத்துவாரம் வரை அமைந்துள்ளது. இதில் கல்லீரல், கணையம், மண்ணீரலும் அடங்கும்.

செரிமானப் பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கு பிரத்யேக அறிகுறிகள் எதுவும் கிடையாது. கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீராத முதுகுவலி காணப்படும். மதுப் பழக்கமுடையவர்களையே இது அதிகம் தாக்கும்.

செரிமான புற்றுநோய் வராமலிருக்க புளிப்புத்தன்மையுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். புகைப் பிடித்தல், மது அருந்துதல், பொரித்த உணவுகள், துரித உணவகங்களில் தீயால் கருக்கப்பட்ட உணவுகள், உப்பு அதிகமுள்ள உணவுகள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com