தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

எழிச்சூர் பகுதியில் ரூ. 14.90 கோடியில் கட்டப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் தெரிவித்தார்.

எழிச்சூர் பகுதியில் ரூ. 14.90 கோடியில் கட்டப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் தெரிவித்தார்.
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 5 இடங்கள், கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஓரிடம் என மொத்தம் 9 இடங்களில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் ஓய்றைகள் கட்டப்படும் என கடந்த 2014ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 
இதில் எழிச்சூர் ஓய்வறையின் கட்டுமானப் பணிகளை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சென்னை புறநகரில் 5 இடங்கள் மற்றும் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஓரிடம் என மொத்தம் 9 இடங்களில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகளைக் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 
கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டாலும், சில பணிகள் முடிவடையாத காரணத்தால் அவற்றைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியவில்லை. அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. எனவே இந்த ஓய்வறைகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com