கால்நடை விவரங்களை தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னை மாவட்டத்தில் உள்ளவர்கள் கால்நடைகளை வைத்திருந்தால் அதுகுறித்த விவரத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ளவர்கள் கால்நடைகளை வைத்திருந்தால் அதுகுறித்த விவரத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளை கணக்கெடுக்கும் பணிகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதன்படி 20-ஆவது கால்நடைக் கணக்கெடுக்கும் பணி சென்னை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 90 நாள்களுக்கு இக்கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
 அதன் அடிப்படையில் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு, நாய், பூனை போன்றவற்றின் எண்ணிக்கைக் குறித்து கையடக்கக் கருவி மூலம் கணக்கெடுக்க வரும் கால்நடை கணக்கெடுப்பாளரிடம் முழு விவரங்களைத் தவறாமல் தெரிவிக்க வேண்டும். இப்படி சேகரிக்கப்படும் தகவல் மூலமே எந்த மாதிரியான அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யவும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துப் பொருள்கள், மருத்துவ வசதிகள் போன்றவற்றை வழங்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com