ரூ.70 லட்சம் வழிப்பறி வழக்கில் மூவர் கைது

சென்னை, ஏழுகிணறில் செல்லிடப்பேசி கடை ஊழியரை தாக்கி ரூ. 70 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ஏழுகிணறில் செல்லிடப்பேசி கடை ஊழியரை தாக்கி ரூ. 70 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
 ஏழுகிணறு மாடிப்பூங்கா, வெங்கட்ராமன் தெருவில் ஜாபர் என்பவர் இணையதளம் மூலம் செல்லிடப்பேசி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு ஏழுகிணறு பாளையப்பன் தெருவைச் சேர்ந்த ரபீகான் (36) வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி, ஜாபர், ரபீகானிடம், ரூ.70 லட்சத்தை கொடுத்து, ஏழுக்கிணறு பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். ரபீகான், அந்த பணத்துடன், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
 அவர், ஏழுகிணறு ஆணைக்கார கோனார் தெரு, பெரியண்ணா தெரு சந்திப்பு பகுதியில் சென்றபோது, ஒரு கும்பல் வழிமறித்து ரபீகானை தாக்கி, ரூ.70 லட்சத்தை வழிப்பறி செய்தது. இது தொடர்பாக, ஏழுகிணறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 இந்நிலையில் போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடையதாக, சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் தாவூத் (26), கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கிஷோர் (24), பொன்னேரியைச் சேர்ந்த சதீஷ் ( 25) ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.
 அந்த விசாரணையில் அவர்கள், 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது போலீஸாரால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதேவேளையில் இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com