1,700 பேருக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை

சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களில் நடைபெற்ற இலவச ரத்த சர்க்கரை நோய் பரிசோதனை முகாமில் 1,700 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்.


சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களில் நடைபெற்ற இலவச ரத்த சர்க்கரை நோய் பரிசோதனை முகாமில் 1,700 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை (நவ.14) முன்னிட்டு, சூளைமேடு எக்ஸ்னோரா இன்னொவேட்டர்ஸ் கிளப் மற்றும் அருணா சர்க்கரை நோய் சிகிச்சை மையம் சார்பில் முகாம் நடைபெற்றது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (நவ.11), நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் புதன்கிழமையும் (நவ.14) முகாம் நடைபெற்றது.
புதிதாக 170 பேருக்கு...எழும்பூரில் 750 பேர், நுங்கம்பாக்கத்தில் 950 பேர் என மொத்தம் 1,700 பேர் பரிசோதிக்கப்பட்டதில் 170 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஏற்கெனவே சர்க்கரை நோயுடன் உள்ள 1,360 பேருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. 
விழித்திரை பாதிப்பு உள்ளிட்டவற்றைத் தவிர்க்க, ரத்த சக்கரை அளவை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்று அருணா சர்க்கரை நோய் சிகிச்சை மைய இயக்குநர் டாக்டர் அ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
முன்னதாக முகாமை மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி, சூளைமேடு எக்ஸ்னோரா இன்னொவேட்டர்ஸ் கிளப் செயலர் எஸ்.கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com