"புதிய கண்டுபிடிப்பு தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும்'

புதிய கண்டுபிடிப்புகளைப் படைக்கும் அறிவாற்றல் மிகுந்த தொழில் முனைவோரை உருவாக்குவதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று
"புதிய கண்டுபிடிப்பு தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும்'

புதிய கண்டுபிடிப்புகளைப் படைக்கும் அறிவாற்றல் மிகுந்த தொழில் முனைவோரை உருவாக்குவதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று மலேசிய பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக் கழக உதவி துணை வேந்தர் நூர் ஹமீது கூறினார்.
 சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆற்றல்மிகு தொழில்நுட்ப
 மனிதவள மேம்பாடு குறித்த சர்வதேசக் கருத்தரங்கில் அவர் பேசியது:
 சர்வதேச அளவில் தொழில்நுட்பக் கல்வி பயின்று வேலைவாய்ப்பில்லாத மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 24 சதவீதம் அதிகரித்து வருவது கடந்த 2015-இல் கண்டறியப்பட்டது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியில் தொழில்நுட்பக் கல்வி போதிக்கும் பல்கலைக்கழகங்கள் முன்வந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டன.
 அவை மாணவர்களின் அறிவாற்றலை தொழில்துறைக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கான முயற்சிகளை எடுத்தன. இதனால் மலேசியாவில் கடந்த 2015-இல் தொடங்கப்பட்ட 10 ஆண்டு தொழில்நுட்பக் கல்வி மேம்பாடு திட்டம், வேலைதேடுவோரின் எண்ணிக்கையைக் குறைத்து தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது.
 கல்வி பயிலும்போதே தொழில் நிறுவனங்களில் பயிற்சி, தொழில் நிறுவனங்களின் ஆய்வு நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்கள் தொழில்முனைவோராக ஊக்குவிக்கப்படுகிறது.
 புதிய கண்டுபிடிப்புகளைப் படைக்கும் அறிவாற்றல் மிகுந்த தொழில் முனைவோரை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை நாம் அதிகரிக்கச் செய்ய முடியும் என்றார் நூர் ஹமீது.
 சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மலேசியா பெட்ரோனாஸ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
 வங்கதேசம் உட்டாரா பல்கலைக் கழக மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் நஸ்ரூல் இஸ்லாம், டர்பன் பல்கலைக் கழகப் பேராசிரியர் விஜெய் ஆசீர்வாதம், அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.மாதவி, பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் சீனிவாசன், தொழிலதிபர் விஜயராஜ், சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் பழனிகுமார், வணிக மேலாண்மைத் துறை இயக்குநர் கே.மாறன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com