வண்டலூர் பூங்காவுக்கு புதிய வரவு வங்கப் புலிக்குட்டி

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த வங்கப் புலிக் குட்டி தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த வங்கப் புலிக் குட்டி தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இந்தப் பூங்காவில் உள்ள "உத்ரா' என்ற வங்க பெண் புலிக்கும், "விஜயன்' என்ற வங்க ஆண் புலிக்கும் கடந்த 7 வாரங்களுக்கு முன்பு ஒரு பெண், ஆண் என இரண்டு புலிக் குட்டிகள் பிறந்தன. இதில், தாய்ப் புலி, குட்டிகளை சரியாகப் பராமரிக்காததால் பெண் புலிக் குட்டி பிறந்தவுடன் இறந்தது. இதையடுத்து, மற்றொரு ஆண் புலிக்குட்டி தாய் புலியிடம் இருந்து பிரிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.
 தற்போது, அந்த ஆண் புலிக்குட்டி 5.5 கிலோ எடையுடன் நல்ல உடல் நிலையில் உள்ளது. பால் மட்டுமே உணவாக உட்கொண்ட இந்தப் புலிக்குட்டி, கடந்த ஒரு வாரமாக கோழி இறைச்சியை உண்ணத் தொடங்கியுள்ளது. இந்தப் புலிக் குட்டியை அடுத்த 4 மாதங்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்றனர் பூங்கா அதிகாரிகள்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com