வாக்காளர் பட்டியலில் திருத்தம்: இன்று சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்வதற்கான
வாக்காளர் பட்டியலில் திருத்தம்: இன்று சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக். 14) நடைபெற உள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள், 1.1.2019 அன்றுடன் 18 வயது நிறைவு அடைபவர்கள் படிவம் 6, பெயர் நீக்கத்துக்கு படிவம் 7, பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8, ஒரே சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடம்பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க படிவம் 8-(ஏ) ஆகியவற்றைப் பூர்த்தி செய்து அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் அலுவலகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்று சிறப்பு முகாம்: இதற்கான சிறப்பு முகாம் 16 சட்டப் பேரவைத் தொகுயில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 13) காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும் படிவங்களைப் பெறவும், பூர்த்தி செய்த படிவங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், www.elections.tn.gov.in அல்லது nvsp.in என்ற இணையதள முகவரிகள் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com