வீட்டை இடித்த விவகாரம்: அதிகாரிகளுக்கு அபராதம்

வீடுகளைக் காலி செய்ய அனுப்பிய நோட்டீஸ் காலம் முடிவதற்குள் வீட்டை இடித்த விவகாரத்தில் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை ஊழியருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடுகளைக் காலி செய்ய அனுப்பிய நோட்டீஸ் காலம் முடிவதற்குள் வீட்டை இடித்த விவகாரத்தில் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை ஊழியருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அன்பரசன் மற்றும் கவிதா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாகக் கூறி அவற்றை 21 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என செங்கல்பட்டு வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீûஸ ரத்து செய்யக் கோரியும், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க உத்தரவிடக் கோரியிருந்தனர்.
 இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் அன்பரசன், அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கெடு வரும் 17-ஆம் தேதி முடிவடைகிறது. ஆனால் கெடு முடிவதற்குள் வீடுகளை இடித்து விட்டதாகக் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு விசாரணைக்காக செங்கல்பட்டு வட்டாட்சியர் பாக்யலட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர் பிரஷ்னேவ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்போது நீதிபதிகள், காலக்கெடு முடிவதற்குள் வீடுகளை எப்படி இடிக்க முடியும், அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு மேலானவர்களா எனக் கேள்வி எழுப்பினர். மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும் அரசு அதிகாரிகள் சட்டப்படியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து வட்டாட்சியர் பாக்யலட்சுமி வீட்டை இடிக்க தான் உத்தரவிடவில்லை எனக் கூறி மன்னிப்புக் கோரினார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com