சிறந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளுக்கு பரிசுகள்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை மக்கள் தங்களது வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்புப் கட்டமைப்புகளை புகைப்படம், விடியோ எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்தால் சிறந்தவற்றுக்குப் பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
சிறந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளுக்கு பரிசுகள்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை மக்கள் தங்களது வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்புப் கட்டமைப்புகளை புகைப்படம், விடியோ எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்தால் சிறந்தவற்றுக்குப் பரிசு வழங்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி:
 வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள இக்கால கட்டத்தில் வீடுகளில் மழை சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் மழை நீர் கட்டமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை புகைப்படம் எடுத்து முகநூல், சமூக வலைதளங்களில் போடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 அனைவருக்கும் பேட்ஜ்: சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் படத்தை எடுத்து வெளியிடலாம். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைப் பராமரிப்பதை குறும்படம், புகைப்படமாக எடுத்து, அதை "மெட்ரோவாட்டர்' என்ற முகநூலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்பவர்கள் அனைவருக்கும் "ஆர்டபிள்யூஹெச் சாம்பியன்' என்ற பேட்ஜ் வழங்கப்படும். சிறந்த பதிவுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முகநூலில் பதிவு செய்தவர்கள் தங்கள் சென்னைக் குடிநீர் வாரிய பகுதி அலுவலக பொறியாளர்களிடம் பேட்ஜைப் பெற்றுக் கொள்ளலாம்.
 வீடு, வீடாக ஆய்வு நடைபெறும்: இது தவிர குடிநீர் வாரியப் பொறியாளர்கள், ஊழியர்கள் வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பினை பார்வையிடுகிறார்கள். தினமும் 10 முதல் 20 வீடுகளை ஆய்வு செய்து மழை நீர் சேகரிப்பு குறித்த விதிமுறைகளை விளக்கி கூறுகிறார்கள். 325 குடிநீர் வாரிய அலுவலகங்கள், 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறார்கள். மேலும் கோயம்பேட்டில் மழை நீர் சேகரிப்புக் குறித்த ஓவியப்போட்டியும் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பற்றி பெயிண்டிங் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com