பொறியியல் மாணவர்களுக்கு 1,000 தொழில் நிறுவனங்களில் தொழிற்பயிற்சி

பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 6 மாத கால தொழிற்பயிற்சி அளிக்க, நாடு முழுவதும் 1,000 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று
பொறியியல் மாணவர்களுக்கு 1,000 தொழில் நிறுவனங்களில் தொழிற்பயிற்சி

பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 6 மாத கால தொழிற்பயிற்சி அளிக்க, நாடு முழுவதும் 1,000 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் எம்.பி.பூன்யா தெரிவித்தார்.
 மேற்கு தாம்பரம் சாய்ராம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் 7-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் 612 மாணவர்களுக்கு பட்டமளித்து பூன்யா பேசியது:
 சர்வதேச அளவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை ஜப்பானில் 70 சதவீதமாகவும், மலேசியாவில் 50 சதவீதமாகவும், சீனாவில் 40 சதவீதமாகவும், இந்தியாவில் 25 சதவீதமாகவும் உள்ளது. சீனா, ரஷியா உள்ளிட்ட இதர நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் அறிவாற்றலை ஒப்பிடும்போது இந்திய மாணவர்களின் கல்வி கற்கும் திறன், புதிய தொழில்நுட்பங்களை விரைவில் கற்றுக்கொள்ளும் திறன் கூடுதலாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
 இந்திய மாணவர்களின் கடும் உழைப்பும், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் அர்ப்பணிப்பும், வழிகாட்டுதலும்தான் இந்த பெருமைக்குரிய சாதனைக்கு முக்கிய காரணம்.
 திறமையான மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி நடவடிக்கையை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள ரூ10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
 மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பேராசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 500 பேராசிரியர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பி.எச்டி., படிப்புக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த 6 மாதகால தொழிற்சாலை பயிற்சி கட்டாயமாக்கப்பட உள்ளது என்றார் எம்.பி.பூன்யா.
 பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 61 மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. விழாவில், சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ், முதல்வர் கே. பழனிகுமார், ஆய்வுத்துறை இயக்குநர் ஏ.ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com