ராயப்பேட்டையில் பச்சிளம் குழந்தைகளுக்கான பரிசோதனைக் கூடம் திறப்பு

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையுடன் இணைந்து பச்சிளம் குழந்தைகளுக்கான பரிசோதனைத் திட்டத்தை ராயப்பேட்டை நியூபெர்க் எர்லிச் ஆய்வகம் செயல்படுத்த உள்ளது.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையுடன் இணைந்து பச்சிளம் குழந்தைகளுக்கான பரிசோதனைத் திட்டத்தை ராயப்பேட்டை நியூபெர்க் எர்லிச் ஆய்வகம் செயல்படுத்த உள்ளது.
 நியூபெர்க் எர்லிச் பரிசோதனை மையத்தின் 80-ஆம் ஆண்டு விழா, ராயப்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட அந்த நிறுவனத்தின் அதிநவீன பரிசோதனைக்கூட திறப்பு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், வெளி விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் விஜய்குமார் சிங், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆய்வகத்தை திறந்து வைத்தனர்.
 பரிசோதனை: இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நியூபெர்க் எர்லிச் பரிசோதனை மையத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜிஎஸ்கே வேலு பேசியது: இந்த நவீன பரிசோதனைக்கூடத்தில் நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்யலாம்.
 எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், குழந்தை பிறந்த 48 மணி நேரத்துக்குப் பிறகு அதன் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு சுரப்பி குறைபாடு, அட்ரினல் சுரப்பி குறைபாடு, பரம்பரை வியாதிகள் ஆகியவை குறித்து அறிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் மட்டும் 77,000 பச்சிளம் குழந்தைகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com