சென்னை வந்த விமானத்தில் ரூ.2.80 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

கோயம்புத்தூரிலிருந்து சென்னை வழியாக புதுதில்லி செல்லவிருந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.80 கோடி மதிப்பிலான 8 கிலோ


கோயம்புத்தூரிலிருந்து சென்னை வழியாக புதுதில்லி செல்லவிருந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.80 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஏர் இந்தியா விமானம் கோயம்புத்தூரிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை வந்தது. அங்கிருந்து மாலை 5 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டுச் செல்லவிருந்த நிலையில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விமானத்தின் கழிவறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகளை கண்டறிந்த அந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த விமானம் செவ்வாய்க்கிழமை காலை துபையிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது. அதன் பின்னர் தில்லிக்குச் சென்ற அந்த விமானம் நண்பகல் 12.30-க்கு சென்னை வந்துள்ளது. பின்னர் கோயம்புத்தூர் சென்று மாலை சென்னைக்கு திரும்பியபோதுதான் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டது. 
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், துபையிலிருந்து கடத்தி வரப்பட்டதா, யார் இதை கழிவறையில் மறைத்து எடுத்து வந்தது போன்ற தகவல்களைப் பெற அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
8 கிலோ எடையுள்ள இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.2. 80 கோடியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com