168 இடங்களில் பேறுகால ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

பேறுகால ஊட்டச்சத்து, தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 168 இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக


பேறுகால ஊட்டச்சத்து, தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 168 இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மாரியப்பன் தெரிவித்தார்.
பேறுகால ஊட்டச்சத்து, தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து பாரம்பரியக் கலைகள் வாயிலாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பயிலரங்கு சென்னை சாஸ்திரி பவனில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கில், உணவு, ஊட்டச்சத்து செயல் விளக்க அலுவலர் உஷாராணி, மருத்துவம் சார் ஊட்டச்சத்து, உணவுப்பழக்கத் துறை உதவிப் பேராசிரியர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டு தாய்ப்பால் வழங்குவதன் அவசியம், பச்சிளங்குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, பழங்கால உணவு முறை ஆகியவை குறித்துப் பேசினர்.
இதுகுறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மாரியப்பன் கூறியது: 
பாரம்பரிய கலைகள் மூலம் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடும் கலைஞர்களுக்கான ஊதியம் விரைவில் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. பேறுகால ஊட்டச் சத்து, தாய்ப்பால் வழங்குவது குறித்து முதல்கட்டமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் 168 இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்றார் அவர். பயிலரங்கில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குநர் எம். ரவிக்குமார், இசை நாடகப் பிரிவு மேலாளர் குல்தீப் குமார் சாகரே ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com