குட்கா ஊழல் விவகாரம்: ஆலை உரிமையாளரின் காவல் நீட்டிப்பு

குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 4 -ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம்

குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 4 -ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலையின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களின் நீதிமன்ற காவல் வியாழக்கிழமையுடன் (செப்.20) முடிவடைந்தது. 
இந்த நிலையில், இவ்வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 5 பேரின் நீதிமன்ற காவலையும் வரும் அக்டோபர் 4 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் செந்தில்முருகன், பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை வரும் 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com