40 வயதுக்கு மேல் ஆண்கள் ப்ராஸ்டேட் புற்று நோய் பரிசோதனை செய்வது அவசியம்

ப்ராஸ்டேட் புற்று நோய் வரலாறு உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதுக்கு மேல் அதற்குரிய பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்


ப்ராஸ்டேட் புற்று நோய் வரலாறு உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதுக்கு மேல் அதற்குரிய பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாரதிராஜா மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் எம்.ஜி.ராஜமாணிக்கம், அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் பி.பி.சிவராமன் ஆகியோர் கூறியது: ஆண்களுக்கு வயதாகும்போது, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில், முக்கியமானது ஆண்களின் சிறுநீர்ப் பையின் அருகே உள்ள ப்ராஸ்டேட் எனப்படும் விந்துச் சுரப்பியின் வளர்ச்சியாகும். இதன் காரணமாக ப்ராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய்த் தாக்கம் ஏற்படுகிறது.
வீக்கமடையும் ப்ராஸ்டேட் சுரப்பி காரணமாக சிறுநீர் கழிக்கும் திறன் நேரடியாகப் பாதிப்படைகிறது. மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றுதல், சிறுநீர் கழித்த பின்பும் சிறுநீர் பை காலியாகாத உணர்வு, திடீரென்று அவசரமாக சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கத் தொடங்குதல், அதை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ப்ராஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com