இன்றும், நாளையும் கால்நடைகள் மருத்துவ முகாம்
By காஞ்சிபுரம், | Published on : 30th May 2014 12:30 AM | அ+அ அ- |
தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மருத்துவ முகாம் நடைபெறும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கியது.
இத்திட்டத்தில் வழங்கப்படும் மாடுகள் மற்றும் ஆடுகளை நன்கு பராமரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் புத்தாண்டின்போது சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையிலும், ஆடுகளின் எடையை அதிகரிக்கும் வகையிலும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. கறவைப் பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனையும், ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம்களும் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.