கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பதாக புகார்: குறைதீர் கூட்டத்தில் விவசாயி முறையீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசப்பாக்கம், கல்பட்டு, ஆத்தூர் போன்ற கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பொன்னையா
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசப்பாக்கம், கல்பட்டு, ஆத்தூர் போன்ற கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செளரிராஜன், வேளாண்மை இணை இயக்குநர் சீத்தாராமன், திட்ட இயக்குநர் ஜெயக்குமார், கூட்டுறவு இணைப் பதிவாளர் சந்திரசேகரன், கால்நடை இணை இயக்குநர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், ஏரி, குளங்களில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரி, குளம், நீர்வரத்துக் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் மையங்கள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.
ஆட்சியர்: இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநடப்பு: இதைத் தொடர்ந்து தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கத் தலைவர் சோழனூர் ஏழுமலை, பாலாற்றுப் படுகை விவசாயிகள் சங்கத் தலைவர் மணி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சாலவாக்கம் உசேன், பூதூர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விவசாயி திருவேங்கடம், நெசப்பாக்கம், கல்பட்டு, ஆத்தூர் போன்ற கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு எந்தவித கடனும் தர மறுக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயி நேரு பேசுகையில், மத்திய கூட்டுறவு வங்கிகளில் கரும்பு பயிரிட அடமானக் கடனுக்கு சிட்டா, பட்டா கேட்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், ஒரு யூனிட் வண்டல் மண் எடுத்தால் விவசாயிகளுக்கு ரூ.1,000-ம் செலவாகிறது. எனவே இரண்டு அல்லது மூன்று விவசாயிகள் சேர்ந்து எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும், மேலும், 1980-இல் களியனூரில் கொடுக்கப்பட்ட அரசுப் பட்டாவை மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் தடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

(இடமிருந்து 3-வது).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com