மதுக்கடைக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு

திருப்போரூர் வட்டத்துக்கு உள்பட்ட  இள்ளலூரில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

திருப்போரூர் வட்டத்துக்கு உள்பட்ட  இள்ளலூரில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்துக்கு உள்பட்ட இள்ளலூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் பா.பொன்னையாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: இள்ளலூர் பகுதியில் பெரியார் நகர், செங்காடு, ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட உள்ளது.
மேலும் செங்காடு ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்லவும், வெண்பேடு ஊராட்சிக்குச் செல்லவும் பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.
இதனையொட்டி கண்ணகப்பட்டு ஏரி உள்ளது. ஏரியில் அடர்ந்த புதர் உள்ளது. இதனால் இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கப்பட்டால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். மேலும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, குழந்தைகள், பெண்கள் எந்தவித பயமும் இல்லாமல் சென்றுவர அப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com