தாங்கல் ஏரிக்கரை சீரமைக்கும் பணி தீவிரம்

தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் தூர்ந்து போய் குப்பைக் கழிவுகள் கொட்டும் கிடங்காக மாறி இருந்த தாங்கல் ஏரிக்கரையைச் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது
கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்ட தாங்கல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணி.
கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்ட தாங்கல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணி.

தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் தூர்ந்து போய் குப்பைக் கழிவுகள் கொட்டும் கிடங்காக மாறி இருந்த தாங்கல் ஏரிக்கரையைச் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
உள்ளூர் இளைஞர்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு தன்னார்வத்துடன் ஏரிக்கரையை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
நந்திவரம் நந்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில் குடிநீர், விவசாயத்திற்கு பயன்பாட்டில் இருந்து வந்த தாங்கல் ஏரி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, தூர்ந்து காலப்போக்கில் குப்பைக் கிடங்காக மாறி விட்டது.
ஏற்கெனவே நந்திவரத்தில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தி நன்னீர் குளமாக மாற்றி சாதனை நிகழ்த்திய இளைஞர்கள், நந்திவரம் சமூகப் பொதுக்குழு என்ற அமைப்பை உருவாக்கி, தற்போது தாங்கல் ஏரியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி பேரூராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிக்கு உறுதுணை புரிந்துள்ளது.
இது குறித்து கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அதிமுக அரசியல் பிரமுகர் ராஜதேவன், பாஜக பிரமுகர் பாஸ்கர் ஆகியோர் கூறியதாவது:
உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் பொது நல நோக்குடன் சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து ஊராட்சி, பேரூராட்சி நகராட்சிகளிலும் இதுபோன்று இளைஞர்கள் ஆர்வமுடன் ஈடுபட முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com