திருநீர்மலையில் ரேஷன் பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

குரோம்பேட்டையை அடுத்த திருநீர்மலை பேரூராட்சியில் கூடுதல் ரேஷன் கடை இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குரோம்பேட்டையை அடுத்த திருநீர்மலை பேரூராட்சியில் கூடுதல் ரேஷன் கடை இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது
சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை தெற்கு மாட வீதி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடையைத்தான் 13,14,15,16,17,18 ஆகிய 6 வார்டுகளைச் சேர்ந்த சுமார் 1,470 குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ரேஷன் கடைக்குச் சென்றால்தான் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்ற நிலையில், சில குறிப்பிட்ட வார்டை சேர்ந்தவர்கள் ரேஷன் கடைக்கு வந்து அனைத்து பொருட்களையும் வாங்கிச் சென்று விடுகின்றனர்.
இதனால் பிற வார்டை சேர்ந்தவர்கள் ரேஷனில் அனைத்துப் பொருட்களும் பெற முடியாத நிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.
ரேஷன் கடை பிரச்னை காரணமாக திருநீர்மலையில் இரு பிரிவினருக்கும் இடையில் நிலவி வரும் இறுக்கமான நிலையைத் தவிர்க்க கூடுதலாக ஒரு புதிய ரேஷன் கடையை அப்பகுதியில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
திருநீர்மலை பஞ்சாயத்து அலுவலத்திற்கு எதிரில் சில வருடங்களுக்கு முன் ரேஷன் கடைக்கென புதிதாகக் கட்டப்பட்ட கட்டடமும் இதுவரை திறக்கப்படாமல் சிதிலமடைந்து உள்ளது.
இதுகுறித்து பல்லாவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி கூறியதாவது:
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் வகையில் திருநீர்மலை பேரூராட்சியில் புதிய ரேஷன்கடை கட்டுவதற்கென சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கி உள்ளேன். விரைவில் கடை கட்டப்பட்டு மக்களின் குறை தீர்க்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com