செங்கல்பட்டு போர் வீரர்கள் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை

சுதந்திர தினத்தையொட்டி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள போர்வீரர்கள் நினைவுச் சின்னத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
செங்கல்பட்டில் போர் வீரர்கள் நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர்.
செங்கல்பட்டில் போர் வீரர்கள் நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர்.

சுதந்திர தினத்தையொட்டி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள போர்வீரர்கள் நினைவுச் சின்னத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1971-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்திய நாட்டுக்காக இன்னுயிர் தந்த காஞ்சிபுரம் மாவட்ட வீரர்களின் நினைவாக இந்த நினைவுச்சின்னம் 1974-இல் நிறுவப்பட்டது. செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பினர் நினைவுச் சின்னத்தையும், சாலையின் இருபுறம் உள்ள பூங்காவையும் பராமரித்து வருகின்றனர்.
இங்கு சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற போர் வீரர்களுக்கு நடைபெற்ற வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில், தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டுக்காக உயிர்துறந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் இந்தியாவின் உயர் ராணுவ விருதான பரம்வீர்சக்ரா பெற்ற வீரர்களை நினைவுக் கூருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஸ்ரீபாதராஜன், ஜெயந்திரன், அப்துல்சுபாந், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரார்கள் முன்னிலையில், சார் ஆட்சியர் ஜெயசீலன் போர்வீரர்கள் நினைவுச் சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வளர்ச்சிமன்ற குழு செயலாளர் ராஜி, இந்திய மருத்துவச்சங்க தலைவர் அரசு, ரங்கா மருத்துவமனை மருத்துவர் பிச்சுமணி, செங்கல்பட்டு தொழுநோய் ஆராய்ச்சி மைய மருத்துவமனை இயக்குநர் செளகத்அலி, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் செளந்தரராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இ.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஏர் மார்ஷல் வர்தமான் சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய தேசத்தின் ராணுவத்தின் உயர்விருதான பரம்வீர்சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com