நாகஸ்வர கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சினிமா மற்றும் சின்னத்திரைகளில் நாகஸ்வர கலைஞர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் வருவதாகவும், அதனைக் கண்டித்தும் நாகஸ்வர கலைஞர்கள் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவில், நாகஸ்வர இசைக் கலைஞர்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவில், நாகஸ்வர இசைக் கலைஞர்கள்.

சினிமா மற்றும் சின்னத்திரைகளில் நாகஸ்வர கலைஞர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் வருவதாகவும், அதனைக் கண்டித்தும் நாகஸ்வர கலைஞர்கள் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அண்மைக்காலமாக எடுக்கப்படும் திரைப்படங்களில் தவில், நாகஸ்வர கலைஞர்களை அவமதிக்கும் வகையில் சித்தரிக்கிறார்கள். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரீமேக் என்ற பெயரில் நாகஸ்வர, தவில் இசைக் கலைஞர்களை மிகவும் கொச்சைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது தனியார் தொலைக் காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு நடிகர் நாகஸ்வர கருவியை இழிவுபடுத்தி உள்ளார். மேலும் தில்லானா மோகனாம்பாள் ரீமேக் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியில் நாகஸ்வர கலைஞர்களை இழிவுபடுத்தி உள்ளனர்.
தற்போது வெளிவர உள்ள திரைப்படம் ஒன்றிலும் நாகஸ்வரம், தவிலை இழிவுபடுத்தி உள்ளனர். எனவே, எங்கள் சங்கம் சார்பில் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சவுந்தர்ராஜன் மற்றும் நரேஷ்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com