லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக தொடர் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளங்களின் தொடர் வேலை நிறுத்தம் மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளங்களின் தொடர் வேலை நிறுத்தம் மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தின் தலைவர் செல்லராஜாமணி தலைமையில் மதுராந்தகத்தை அடுத்த படாளம் பகுதியில் இப்போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களும், லாரி ஓட்டுநர்களும் பங்கேற்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், செய்யாறு பகுதியை ஒட்டி உள்ள திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் மணல் குவாரியை திறக்க வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணலை தமிழக அரசே விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டத்தை நடந்து வருகிறது. இதில் திரளான லாரி உரியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழுவதும் லாரிகள் ஓடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com