மருத்துவக் கல்லூரிக்கு உரிமம்: ரூ. 8 கோடி மோசடி செய்தவர் கைது

மாமல்லபுரம் அருகே ரத்து செய்யப்பட்ட கல்லூரியின் உரிமத்தை மீண்டும் பெற்றுத் தருவதாக கூறி, ரூ. 8 கோடி மோசடி செய்ததாக வட மாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

மாமல்லபுரம் அருகே ரத்து செய்யப்பட்ட கல்லூரியின் உரிமத்தை மீண்டும் பெற்றுத் தருவதாக கூறி, ரூ. 8 கோடி மோசடி செய்ததாக வட மாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமாக தனியார் மருத்துவக் கல்லூரி இயங்கி வந்தது. இக்கல்லூரியின் உரிமையை கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது.
 இந்நிலையில், ஆமதாபாதைச் சேர்ந்த  யோகேஷ்குமார் குப்தா (52), முருகேசனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
 அப்போது, இந்திய மருத்துவ கவுன்சிலால் ரத்து செய்யப்பட்ட உரிமத்தை மீண்டும் பெற்றுத் தருவதாகக் கூறி,  அதற்காக தவணை முறையில் சுமார் ரூ.8 கோடி வரை பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், நாள்கள் சென்றதே தவிர கல்லூரிக்கு உரிமைத்தை பெற்றுத்தரவில்லையாம்.
 இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரித்தபோது, யோகேஷ்குமார் குப்தா மோசடி பேர்வழி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரி உரிமையாளர் முருகேசன், இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
 அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிந்து, தலைமறைவான யோகேஷ்குமார் குப்தாவை தேடி வந்தனர். இந்நிலையில் அவர், ஆமதாபாதில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு போலீஸார் அங்கு சென்று, யோகேஷ்குமார் குப்தாவை கைது செய்து விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை காஞ்சிபுரம் அழைத்து வந்தனர். அவரிடம், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com