சமூகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் மற்றும் களப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் பா. பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் மற்றும் களப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் பா. பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியரைத் தலைவராக கொண்டு இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள சமூகப் பணியாளர் (பெண்கள் மட்டும்), களப் பணியாளர் (ஆண், பெண்கள்) பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
அதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்கள் முற்றிலும் தாற்காலிக தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. சமூகப் பணியாளர் பணியிடத்திற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டதாரி, இளநிலை பட்டதாரி (உளவியல், சமூகப் பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்). வயது 40-க்குள் மிகாமல் இருக்க வேண்டும். தொகுப்பு ஊதியம் ரூ. 14,000. களப்பணியாளர் பணியிடத்துக்கான கல்வித் தகுதி 10, 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குழந்தை சார்ந்த பணியில் ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தொகுப்பு ஊதியம்: ரூ.8,000. மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்புகளை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317, காமாட்சி நிலையம், கேடிஎஸ் மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம்-631502. மேலும் விவரங்களுக்கு 044- 27234950 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com