ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ந்த நெற்பயிருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு,
காஞ்சிபுரத்தை அடுத்த தாமலில் காய்ந்த நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்த விவசாயிகள்.
காஞ்சிபுரத்தை அடுத்த தாமலில் காய்ந்த நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்த விவசாயிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ந்த நெற்பயிருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தில் 300 ஏக்கருக்கும் மேல் பயிர்கள் நீரின்றி கருகியது. இவற்றுக்கு இழப்பீடு வழங்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் காய்ந்த நெற்பயிருடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.
அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளிக்க வைத்தனர்.
மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். அதில் 200-க்கும் மேற்பட்டோர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். குறுவை சாகுபடியில் விவசாயம் செய்தோம். ஆனால் வேகவதி ஆற்றில் அதிகளவில் மணல் அள்ளியதால் குடிநீர் ஆதாரம் அகலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால், ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள நீர் முற்றிலும் வற்றிவிட்டது. அதைத் தொடர்ந்து நெற்பயிர்கள் முழுவதும் நீரின்றி காய்ந்து விட்டன.
போதுமான மழையும் இல்லை, பருவமழை பொய்த்து விட்டதால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம்.
ஆகவே எங்களது நலன் கருதி அரசு வறட்சி நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
விவசாயத்துக்குத் தேவையான நீர் கிடைக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com