நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு

மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேட்டில் சென்னை நபார்டு வங்கியும், ஸ்டார் தொண்டு நிறுவனமும் இணைந்து நீர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம், பேரணி ஆகியவற்றை அண்மையில் நடத்தின

மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேட்டில் சென்னை நபார்டு வங்கியும், ஸ்டார் தொண்டு நிறுவனமும் இணைந்து நீர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம், பேரணி ஆகியவற்றை அண்மையில் நடத்தின .
நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் துணைப் பொது மேலாளர் மசார் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வங்கியின் துணைப் பொது மேலாளர் மசார் பேசுகையில், நபார்டு வங்கி நீர் மேலாண்மையை முழுமையாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீரின் முக்கியத்துவம், மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றை எல்லோரும் அறிய வேண்டும். மாவட்டத்தில் 500 கிராம வருவாய் பஞ்சாயத்துகளைத் தேர்வு செய்து, அதில் 40 நபர்களை நீர்வள தூதுவர்களாக பயிற்சி அளித்து கிராமங்களில் நீர் மேலாண்மை விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்த உள்ளனர். இப்பகுதியில் நீர்மேலாண்மையைக் கண்டறிந்து அந்த பருவ காலங்களில் பெய்து வரும் மழை நீரை சேகரிக்க தேவையான பயிற்சிகளை மக்களுக்கு அளித்திட வங்கி நிர்வாகம் உதவி செய்யும் என்றார்.
முன்னதாக நீர் மேலாண்மையை மக்களுக்கு அறிவுறுத்தும்
வகையில், விழிப்புணர்வுப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com