மாமல்லபுரம் விடுதிகளில் தங்குவோரிடம் ஆதார் அட்டை பெற அறிவுறுத்தல்

மாமல்லபுரம் ஓட்டல்கள், விடுதிகளில் தங்க வருவோரிடம் ஆதார் அட்டை பெற்ற பிறகே அறை வழங்க வேண்டும் என மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மாமல்லபுரம் ஓட்டல்கள், விடுதிகளில் தங்க வருவோரிடம் ஆதார் அட்டை பெற்ற பிறகே அறை வழங்க வேண்டும் என மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் தொடர் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் மாமல்லபுரம் காவல் நிலைய உள்கோட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தனியார் விடுதிகள், உணவு விடுதிகள், உணவகங்களின் உரிமையாளர்கள், நிர்வாக மேலாளர்கள் ஆகியோரை அழைத்து மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட் சனிக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் டி.எஸ்.பி. எட்வர்ட் பேசியதாவது:
தில்லி, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள விடுதிகளில் ஆதார் அட்டை வழங்கிய பிறகே அறைகள் வழங்கப்படுகிறது.
அதேபோல் மாமல்லபுரத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக இனி விடுதிகளில் தங்கவரும் நபர்களிடம் இனி ஆதார் அட்டை நகல்கள் பெற்ற பிறகே அறைகள் வழங்க வேண்டும். விடுதிகளின் வரவேற்பறையில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும். பள்ளிச் சீருடையில் வரும் ஜோடிகளுக்கு அறைகள் வழங்கக்கூடாது.
விடுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக மதுபானங்கள் பதுக்கி, அங்கு தங்கும் ஜோடிகளுக்கு வழங்கப்படுவது தெரிந்தால் விடுதி உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில், மாமல்லபுரம் உதவி ஆய்வாளர் கமல தியாகராஜன் உள்ளிட்ட போலீஸார், விடுதிகள் சங்க நிர்வாகிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com