நீரேற்று நிலையங்களில் சார் ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள நீரேற்று நிலையங்களை சார் ஆட்சியர் ஜெயசீலன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
பழவேலி நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்ட சார் ஆட்சியர் ஜெயசீலன்.
பழவேலி நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்ட சார் ஆட்சியர் ஜெயசீலன்.

செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள நீரேற்று நிலையங்களை சார் ஆட்சியர் ஜெயசீலன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக மாமண்டூர், பழவேலி ஆகிய பகுதிகளில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போது 3 முதல் 10 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், செங்கல்பட்டு நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை குறித்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், நீரேற்று நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாகவும், பழவேலியில் உள்ள நீரேற்று தொட்டியும், குழாய்களும் அடித்துச் செல்லப்பட்டதாகவும் சார் ஆட்சியரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாமண்டூரில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து சுழற்சி அடிப்படையில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வந்த நீரேற்று நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனி மின்மாற்றியை சார் ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் புதைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
செங்கல்பட்டை பொருத்தவரை நிலத்தடி நீர் மற்றும் பாலாறு ஏரிகள் இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. சேதமடைந்த நீரேற்று நிலையங்களைச் சீரமைக்கும் பணி குறித்து திட்டமிட்டுள்ளோம். விரைவில் அப்பணிகள் தொடங்கப்படும் என்றார்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து கேட்டபோது, விரைவில் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின் பேது, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் செளந்தரராஜன், பொறியாளர் மாரியப்பன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com