மாவட்டத்தில் 93.51 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93.51 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93.51 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 37,321 மாணவர்களில் 34,940 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.62 சதவீதமாகும். காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 15,622 மாணவர்களில், 14,565 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.23 சதவீதமாகும்.
மாவட்டத்தில் 216 அரசுப் பள்ளிகளில் 19,877 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 17,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.49 சதவீதமாகும். 11 நகராட்சிப் பள்ளிகளில் 763 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 702 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.01 சதவீதத் தேர்ச்சியாகும்.
சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் 6 பள்ளிகளில் தேர்வெழுதிய 105 மாணவர்களில் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.38 சதவீதமாகும். 71 நிதியுதவி பள்ளிகளில் தேர்வெழுதிய 9,830 மாணவர்களில், 9,112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 269 மெட்ரிக். பள்ளிகளில் 20,615 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 20,218 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
6 சுயநிதிப் பள்ளிகளில் தேர்வெழுதிய 229 மாணவர்களில், 215 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.89 சதவீதமாகும். ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் தேர்வெழுதிய 213 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
17 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 1,311 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில், 1,161 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில், 216 அரசுப் பள்ளிகளில் 32 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியும், 11 நகராட்சிப் பள்ளிகளில் ஒரு பள்ளியும், சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் 6 பள்ளிகளில் 4 பள்ளிகளும், 71 நிதியுதவிப் பள்ளிகளில் 12 பள்ளிகளும் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதேபோல், 269 மெட்ரிக். பள்ளிகளில் 145 பள்ளிகளும், 6 சுயநிதிப் பள்ளிகளில் ஒரு பள்ளியும், 17 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 3 பள்ளிகளும் நூறுசதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com