செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு

செங்கல்பட்டு அருகே வல்லிபுரம் பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். 
செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு

செங்கல்பட்டு அருகே வல்லிபுரம் பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். 
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதி பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேவனூர் தடுப்பணை நிரம்பியதையடுத்து பாலாறு பாலூர், வில்லியம்பாக்கம் , செங்கல்பட்டு, மாமண்டூர், வல்லிபுரம் பகுதிகளைக் கடந்து கடலில் கலக்கிறது. 
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பாலாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஏற்பட்ட மகிழ்ச்சியில் மக்கள் பெருகிவரும் வெள்ளத்தை வரவேற்கும் விதமாக கற்பூர தீபம் ஏற்றி, மலர்கள் தூவியும் வரவேற்றனர். பாலாற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மேம்பாலத்தில் கூடி நின்று பாலாற்றில் வெள்ளம் வருவதை பார்த்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து பாலாறு பாசன விவசாயிகள் கூறியதாவது: செங்கல்பட்டை அடுத்த வல்லிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் இருந்து பாசன வசதிக்காக சுற்றுப்புர பகுதிகளுக்கு ஆற்றுநீரை எடுத்துச் செல்லும் கால்வாய்கள் பல ஆண்டுகளாகத் தூர்வாரப் படாததால் பாலாற்றில் வெள்ளம் வந்தும் கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. கால்வாய்கள் தூர்வாரப்படுவதன் மூலம் பலலட்சம் ஏக்கர் பாசனம் பெறும். 
மேலும் வல்லிபுரம் அருகே பாலாற்றில் தடுப்பணைக் கட்ட விவசாயிகள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் .
அந்த அறிவிப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றனர் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com