மாதூர் பள்ளியில் குழந்தைகள் தின விழா
By DIN | Published on : 15th November 2017 03:48 AM | அ+அ அ- |
மதுராந்தகத்தை அடுத்த மாதூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வி.ஆர்.லட்சுமி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் டி.ஸ்ரீதரன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி துணைத்
தலைவர் ரமணி, கே.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், சத்துணவு அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வி, அங்கன்வாடி பணியாளர்கள் மு.சந்திரா, பி.ஜெயந்தி, வரதம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.