புற்றுநோய்க்கு எல்ஐசியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்

புற்றுநோய்க்கான புதிய காப்பீட்டுத் திட்டம் காஞ்சிபுரம் எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

புற்றுநோய்க்கான புதிய காப்பீட்டுத் திட்டம் காஞ்சிபுரம் எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து கிளை மேலாளர் அன்பழகன் கூறியதாவது: புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்காக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காப்பீட்டுத்திட்டத்தில், ஆரம்ப கால, முதிர்வடை கால புற்றுநோய்க்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை பெறமுடியும். அதன்படி, முதல் கட்ட புற்றுநோய் அறிகுறி இருந்தால், 25 சதவீத முதிர்வுத் தொகை பெறலாம்.
அதுபோல், 2, 3 -ஆம் கட்ட புற்றுநோய் அறிகுறி இருந்தால் 100 சதவீத காப்பீட்டுத் தொகையைப் பெறமுடியும். 
இந்தக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு குறைந்த பட்ச வயதாக 20 நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 65 வயதுக்குள் இருக்கவேண்டும். இக்காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்த கால அளவு
10 ஆண்டுகளும், அதிகபட்ச கால அளவு 30 ஆண்டுகளும் தரப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பிரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ. 2,400 செலுத்தி வந்தால், அதற்கு ரூ. 10 லட்சம் என காப்பீட்டுத் தொகைநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டுத் திட்டத்தில், கடன் வசதி, முதிர்வுத் தொகை இல்லை. காப்பீட்டுத் தொகையானது காப்பீடு எடுத்து, குறைந்தது 6 மாத காலத்துக்குப் பிறகே, காப்பீட்டுத் தொகையை புற்றுநோய் பாதிப்புக்கு ஏற்றவாறு பெற முடியும். காப்பீட்டுத் தொகையானது 6 மாதம், 12 மாதம் என இரண்டு தவணையில் கட்டும் வசதி உள்ளது என்றார்.
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனம், முகவர் உள்ளிட்டோரை அணுகலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com