வல்லக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பா.பொன்னையா. 
வல்லக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பா.பொன்னையா. 

'தெரு விளக்குகள் எரிவதில்லை; சாலைகள் சரியில்லை' கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியரிடம் பெண்கள் புகார்

தெரு விளக்குகள் எரிவதேயில்லை, சாலைகளும் சரியாகயில்லை. இவற்றை சீரமைத்துத் தாருங்கள் என வல்லக்கோட்டை கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள்

தெரு விளக்குகள் எரிவதேயில்லை, சாலைகளும் சரியாகயில்லை. இவற்றை சீரமைத்துத் தாருங்கள் என வல்லக்கோட்டை கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் முறையிட்டனர். இதையடுத்து அவற்றை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
காந்தி ஜயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி முன்னிலை வகித்தார். 
இக்கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தெருவிளக்குகள் எரிவதில்லை, தெருச் சாலைகள் மோசமாக உள்ளன. இவற்றை சீரமைத்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். 
இதையடுத்து, உடனடியாக தெருவிளக்குள் அமைக்கவும், சாலைகளைச் சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். 
கூட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலர், தாங்கள் ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேசன் சார்பாக சமையல் பயிற்சி பெற்றுள்ளதாவும், இதுவரை வல்லக்கோட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் சமையல் செய்து விற்பனை செய்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக இந்த சமுதாயக்கூடத்தை வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தினர் தர மறுப்பதால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாகவும், தங்களுக்கு சமையல் கூடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
விரைவில் சமையற்கூடம் தனியாக கட்டித் தரப்படும் என்றும், அதுவரை சமுதாயக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். 
பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஆட்சியர் தலைமையில் தூய்மையே சேவை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சிவகுமார், ஒன்றிய அதிமுக செயலாளர் எறையூர் முனுசாமி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதாரணி, வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் லீமா ரோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மலைப்பட்டு ஊராட்சியில்... 
இதேபோல் மலைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு பற்றாளர் கவாஸ்கர் தலைமை வகித்தார்.
சோமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் தூய்மையே சேவை திட்டத்தை முழு அளவில் செயல்படுத்தவும், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க ஊராட்சிப் பகுதிகளைத் தூய்மையாக வைத்திருப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com