பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக். பள்ளியில் விஜயதசமி விழாவை ஒட்டி புதிய மாணவர்களுக்கு வித்யாரம்பம், சிறப்புப் பூஜை 

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக். பள்ளியில் விஜயதசமி விழாவை ஒட்டி புதிய மாணவர்களுக்கு வித்யாரம்பம், சிறப்புப் பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு டி.ஜெ.எஸ் கல்விக்குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஞானபிரகாசம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார்.
இதில், சரஸ்வதிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், பள்ளி மாணவர்களின் பாட்டு, இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இதைத்தொடர்ந்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அவர்களின் பெற்றோரின் மடியில் அமர்த்தி, அரிசியில் எழுத பயிற்றுவித்து, வித்யாரம்பம் நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகம், பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர். இதில், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com