காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 37,51,230 பேர்: சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37,51,230 பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்டார். 
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 37,51,230 பேர்: சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37,51,230 பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்டார். 
மாவட்டத்திலுள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை, ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது பெற்றுக் கொண்டார். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 37,51,230 பேர். இதில் ஆண்கள் 18,54,276, பெண்கள்18,96,603. மூன்றாம் பாலினத்தவர் 351 பேர் ஆகும்.
சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள்: 11 சட்டப் பேரவை தொகுதிகளில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,24,405 பேரும், குறைந்தபட்சமாக செய்யூர் தனித் தொகுதியில் 2,17,262 வாக்காளர்களும் உள்ளனர். 
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்தும் அந்தந்த தொகுதிகளின் வாக்குச் சாவடி மையங்கள், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ஆகிய அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. 
இந்த வாக்காளர் பட்டியலை அரசு அலுவலக நேரங்களில் பொதுமக்கள் நேரடியாக பார்வையிடலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்கள் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பெறப்படும். இதற்கான சிறப்பு முகாம் வரும் 8, 22-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள அக்டோபர் 7, 21- ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தெரிந்து கொள்ளலாம். 
இந்த வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன், அதிமுக மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மதியழகன், ரூபி ஆர்.மனோகரன் உள்ளிட்டோரிடம் ஆட்சியர் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com