காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மழை

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் நுழைவு வாயிலில் குட்டை போல் தேங்கிய மழைநீர்.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் நுழைவு வாயிலில் குட்டை போல் தேங்கிய மழைநீர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய நாள்களில் காலை 7 முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. அதேசமயம், இரவு நேரங்களில் கடந்த 3 நாள்களாக மழை கொட்டித் தீர்த்தது. செங்கல்பட்டில் அதிகபட்சமாக 50.30 மி.மீ. பதிவாகியுள்ளது. 
செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டினம், திருப்போரூர், சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 3 நாள்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் சாரம் துண்டிக்கப்பட்டது. 
சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் கடந்த 3 நாள்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் பெய்த மழையால் சுற்றுலா இடங்களிலும், சாலைகளிலும் மழைநீர் வெளியேற முடியாமல் தண்ணீர் தேங்கியது. கடற்கரை கோயில் பகுதி, அர்சுணன் தபசு, பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கிதால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகினர். 
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் நுழைவு வாயிலில் மழைநீர் குட்டை போல் தேங்கியது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 129 மி.மீ. மழைப் பதிவு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. 
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 129 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. 
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெய்து வரும், தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
35 அடி உயரமுள்ள பூண்டி ஏரியில், 3,231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி ஏரியில் 77 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 107 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல், 3,330 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 286 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 64 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்கு 18 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரி 881 மில்லியன் கன அடி கொண்டது. தற்போது 52 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. தற்போது ஏரியின் நீர் வரத்து 12 கனஅடியாக உள்ளது.
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 298 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஏரிக்கு 213 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 40 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேற்கண்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை காலை 6 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):
தாமரைப்பாக்கம் -38, திருவள்ளூர் -36, பூண்டி -13, சோழவரம் - 8, திருத்தணி -7, பள்ளிப்பட்டு - 6, கும்மிடிப்பூண்டி -6, திருவாலங்காடு - 5, பூந்தமல்லி - 4.5, ஆர்.கே.பேட்டை - 4, செங்குன்றம் - 2, மொத்தம் - 129 மி.மீ. மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com