அதிக விலைக்கு உரங்களை விற்றால் நடவடிக்கை: வேளாண் துறை எச்சரிக்கை

அதிக விலைக்கு உரம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனரகம் எச்சரித்துள்ளது. 

அதிக விலைக்கு உரம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனரகம் எச்சரித்துள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ நெல் நடவு தொடங்கியுள்ளது. இதற்கு தேவையான உரங்கள்
யூரியா 2,850 மெ.டன், டி.ஏ.பி.1,641 டன், மியூரியேட் ஆப் பொட்டாஷ் 2,049 டன், காம்ப்ளக்ஸ் 2,880 டன் என அனைத்தும் உரவகைகளும் இருப்பில் உள்ளன. 
இந்த உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தனியார் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் போதிய அளவு உள்ளன. விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் போது, தங்களது ஆதார் எண்ணை கொடுத்து, உரம் வாங்க வேண்டும். மேலும், வாங்கிய உரத்துக்கு ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இதில், அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்வது தொடர்பான புகார் இருப்பின், அதுகுறித்து வேளாண் துறை அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைக்காரர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், உர விற்பனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக உரங்கள் தேவைப்பட்டாலும், உடனே வழங்குவதற்காக டான்பெட் தயாராக உள்ளது. 
அதிக விலைக்கு உரம் விற்பது தொடர்பாக புகார்களை 94431 04780 என்ற செல்லிப்பேசி எண்ணிலும், 044-27222977 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் வேளாண் துணை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com