திறன் பயிற்சி திட்ட விழிப்புணர்வு ரதம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி திட்ட விழிப்புணர்வு ரதத்தை வெள்ளிக்கிழமை
திறன் பயிற்சி திட்ட விழிப்புணர்வு ரதம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி திட்ட விழிப்புணர்வு ரதத்தை வெள்ளிக்கிழமை ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது: மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 15-ஆம் தேதி வரை கிராம நலன், தூய்மைக்கான இரண்டு வார விழா நடைபெறவுள்ளது. 
இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 117 ஊராட்சிகளுக்கு அரசின் அனைத்துத் திட்டங்களும் சென்றடைய உள்ளன.
அதோடு, வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும், வறுமை நீங்கிய ஊராட்சியாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 117 ஊராட்சிகளிலும் கிராமப் புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணிகள் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து இளைஞர்
களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால பயிற்சி வழங்கி வருகின்றன. இதன்மூலம், 2019-ஆம் ஆண்டுக்குள் 3 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெறுவர். இப்பயிற்சியில், சேர koushal panjee என்ற செல்லிடப்பேசி செயலியிலும், www.koushalpanjee.nic.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். நபர் ஒருவருக்கு பயிற்சியின் கால அளவினைப் பொறுத்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திறன் திட்ட விழிப்புணர்வு ரதம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், செங்கல்பட்டு சார்-ஆட்சியர் ஜெயசீலன், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com