உள்ளாட்சித் தேர்தல்: தனித் தொகுதி வார்டுகளை அதிகரிக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி வார்டுகளை அதிகரித்து அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் திங்கள்கிழமை
உள்ளாட்சித் தேர்தல்: தனித் தொகுதி வார்டுகளை அதிகரிக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி வார்டுகளை அதிகரித்து அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். 
அதில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் நகராட்சி வளர்ச்சியடைந்து, தற்போது 51 வார்டுகளைக் கொண்ட பெருநகராட்சியாக உள்ளது. அதன்படி, இதுவரை 3 வார்டுகள் மட்டுமே தாழ்த்தப்பட்டோருக்கு (தலித், பழங்குடியினர்) தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளன. 
நிகழாண்டு உள்ளாட்சித் தேர்தல் அடிப்படையில், 23, 42, 49, 51 ஆகிய 4 வார்டுகள் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், விகிதாச்சார அடிப்படையில் 51 வார்டுக்கு குறைந்த பட்சம் 10 வார்டுகளாவது தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். 
குறிப்பாக, காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உள்பட்ட பாலிமேடு, செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம், நேதாஜி நகர் ஆகிய இடங்களில் அதிகளவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். 
ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள விகிதாச்சார தனித் தொகுதி ஒதுக்கீட்டை குறைத்து நடைமுறைப்படுத்தும் வகையில் தற்போதைய ஒதுக்கீடு உள்ளது. 
இது, தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதிகளை நகராட்சி மன்றத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தாழ்த்தப்பட்ட தனித் தொகுதி வார்டுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com