தூய்மை பள்ளி புரஸ்கார் விருது பெற்ற 8 பள்ளிகளுக்கு நற்சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்

தூய்மைப் பள்ளி புரஸ்கார் விருதினை தேசிய, மாநில அளவில் பெற்ற 8 பள்ளிகளுக்கு ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூய்மை பள்ளி புரஸ்கார் விருது பெற்ற 8 பள்ளிகளுக்கு நற்சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்

தூய்மைப் பள்ளி புரஸ்கார் விருதினை தேசிய, மாநில அளவில் பெற்ற 8 பள்ளிகளுக்கு ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 2016 -ஆம் ஆண்டுக்கான தூய்மையான பள்ளி புரஸ்கார் விருதினை தேசிய, மாநில, மாவட்ட அளவில் 8 பள்ளிகள் பெற்றன. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எடையார்பாக்கம் தொடக்கப்பள்ளி தேசிய விருதினையும், உத்தரமேரூர்-காரியமங்கலம், புனித தோமையார் மலை ஒன்றியம்-மூட்டைக்காரன் சாவடி, பழைய தாம்பரம் ஆகிய பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவை மாநில விருதினை பெற்றன. 
அதுபோல், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்-சந்தவேலூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள உயர்நிலை, மகளிர் மேல்நிலைப் பள்ளி, சித்தாமூர்-வெண்ணங்குபட்டு தொடக்கப்பள்ளி, காஞ்சிபுரம்-ஓரிக்கை பகுதி காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி ஆகியவை மாவட்ட விருதினையும் பெற்றன.
பேச்சு கட்டுரை கவிதை போட்டி..: தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் அண்மையில் மாவட்ட அளவில் மாணவர்களுக்கு ஓவியம் (1-5 ஆம் வகுப்பு), கட்டுரை (6-12 ஆம் வகுப்பு) போட்டி நடைபெற்றது. இதில், லத்தூர் ஒன்றியத்தைச் சார்ந்த, இரண்யசித்தி தொடக்கப்பள்ளி மாணவர் ராகேஷ், சீக்காணகுப்பம் மாணவர் கிஷோர், ஸ்ரீபெரும்புதூர் கருணாகரச்சேரி மாணவி யாசினி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றனர். 
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் நடுநிலைப் பள்ளி மாணவி கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் என்ஜிஓ குடியிருப்பு காலனி நடுநிலைப்பள்ளி மாணவர் முகமது அசார் அகமது, காஞ்சிபுரம் முசரவாக்கம் நடுநிலைப்பள்ளி மாணவி நர்மதா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இதில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களான திருக்கழுகுன்றம் எஸ்.சங்கீதா, புனித தோமையார் மலை-ஜமீன் பல்லாவரம் மாணவி துர்கா தேவி, மீனம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவி மணிமேகலை ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். வெற்றி பெற்ற 8 பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கும், 9 மாணவிகளுக்கும் ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com