தொடர் வழிப்பறி: 6 பேர் கைது

காஞ்சிபுரம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

காஞ்சிபுரம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், வாணியம்பாடிக்கு தோல் ஏற்றிச் சென்ற வாகனத்தை சிலர் வழிமறித்தனர். 
அப்போது, ஓட்டுநரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்து சென்றதாக காஞ்சிபுரம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். 
இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளைகேட் சித்தேரிமேடு அருகே லாரியை வழி மடக்கி ஓட்டுநரிடம் இருந்த ரொக்கம் ரூ. 15 ஆயிரம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்து சென்றாக மற்றொரு புகார் வந்தது. 
மேலும் காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை மடக்கி அரை பவுன் மோதிரம், செல்லிடப்பேசி, கையில் இருந்த ரொக்கம் ஆகியவற்றை சில இளைஞர்கள் பறித்துச் சென்றதாக அடுத்தடுத்து புகார் வந்தன.
இந்த தொடர் வழிப்பறியை அடுத்து, மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில் டிஎஸ்பி முகிலன் தலைமையில் காஞ்சி கிராமிய காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் சுங்குவார்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞரை மறித்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காஞ்சிபுரம் கிராமிய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். 
இதில் சின்னையன்சத்திரத்தைச் சேர்ந்த சக்தி (17), மணிகண்டன் (17), சுகுமார் (18), ஏமராஜ் (18) , பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (18), ராகேஷ் (17) ஆகியோர் கூட்டாக வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com