மதூர் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு

மதுராந்தகத்தை அடுத்த மதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுடன், நிலவேம்பு கசாயம் செவ்வாய்க்கிழமை
மதூர் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு

மதுராந்தகத்தை அடுத்த மதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுடன், நிலவேம்பு கசாயம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். ஆசிரியை சர்மிளா பானு முன்னிலை வகித்தார். 
இதில் அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கவிதா, செந்தாமரை ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், கதிர்வேல், குமார், செவிலியர்கள் மோகனா, பவுனம்பாள், காயத்ரி, பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில்...
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு புதன்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா கலந்து கொண்டு சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: 
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மூலம் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
பேரூராட்சி ஊழியர்கள் நகரில் உள்ள 15 வார்டுகளிலும் அவ்வப்போது கொசு மருந்து தெளிக்கின்றனர். ஆட்டோவில் ஒலிபெருக்கி பொருத்தி டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் பயணிகளுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு டெங்கு பரவாமல் தடுக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com