வளர்ச்சிப் பணிகளுக்காக வீரபோகம் கிராமத்தை தத்தெடுத்த எம்.பி.

மதுராந்தகத்தை அடுத்த வீரபோகம் கிராமத்தை மாநிலங்களவை திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தத்தெடுத்து, வளர்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 
வளர்ச்சிப் பணிகளுக்காக வீரபோகம் கிராமத்தை தத்தெடுத்த எம்.பி.

மதுராந்தகத்தை அடுத்த வீரபோகம் கிராமத்தை மாநிலங்களவை திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தத்தெடுத்து, வளர்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 
செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி, இலத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட வீரபோகம் கிராமத்தை மத்திய அரசின் சான்சத் ஆதர்ஷ் திட்டத்தின் கீழ் மாநிலங்களவை திமுக உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி தத்தெடுத்துள்ளார்.
இதையடுத்து இக்கிராமத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்யூர் எம்எல்ஏ மருத்துவர் ஆர்.டி.அரசு தலைமை வகித்தார். 
இதில் மதுராந்தகம் சார்-ஆட்சியர் கில்லி சந்திரசேகர், இலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கெல்வின், உத்தரமேரூர் எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான க.சுந்தர், இலத்தூர் ஒன்றியச் செயலர் ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்யூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அம்மனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட வைஃபை வசதியையும், செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகக் கட்டடம், இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தும், தழுதாளிகுப்பத்தில் உயர் கோபுர மின்விளக்குகளையும் எம்.பி. ஆர்.எஸ். பாரதி இயக்கி வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com