குடியிருப்பை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

கடந்த 65 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தேரிமேடு கிராம மக்கள் ஆட்சியர் பொன்னையாவிடம் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
குடியிருப்பை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

கடந்த 65 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தேரிமேடு கிராம மக்கள் ஆட்சியர் பொன்னையாவிடம் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சித்தேரிமேடு வாசிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: 
காஞ்சிபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் சித்தேரி மேடு கிராமம் உள்ளது. இங்கு 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் கடந்த 65 ஆண்டுகளாக இதே இடத்தில் வசித்து வருகிறோம். அதோடு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு மற்றும் வீட்டுவரி ஆகியவற்றை முறையாக அரசுக்கு செலுத்தி ரசீது பெற்று வருகிறோம். இந்நிலையில், கடந்த அக்டோபர் 12-ஆம் தேதியன்று பொதுப்பணித் துறை மூலம் வீடு மற்றும் இடத்தை காலிசெய்யுமாறு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நாங்கள் குடியிருக்கும் பகுதியானது நீர்பிடிப்புப் பகுதி என்றும், இப்பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், அறிவிப்பு கொடுக்கப்பட்ட 21 நாள்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வசித்து வந்த இத்தனை ஆண்டுகளில், எந்த ஒரு சூழலிலும் புயல், பெருமழை போன்ற காலங்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலிலும் கூட எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் எங்களுக்கு வேறு எங்கும் வசிப்பிடம் இல்லை. எனவே, நாங்கள் தொடர்ந்து அந்த இடத்திலேயே வசிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் திருமாதாசன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மதி ஆதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com